Movie prime

மாதம் 1 லட்சம் பென்ஷன் பெற 25 வயதில் இதை செய்யுங்கள்!!

 
money 2
இந்தியா அரசாங்கத்தால் முதியோர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கு தொடங்கப்பட்ட ஓய்வூதிய மற்றும் முதலீட்டு திட்டம் தேசிய ஓய்வூதிய திட்டமாகும் (NPS). இந்த NPS திட்டம் இரண்டு வகைகளாக பயன் தரும், ஒன்று அரசு ஊழியர்களுக்கு, மற்றொன்று பிற தனிநபர்களுக்கு.

ஜனவரி 1, 2004 அன்று அல்லது அதற்கு பிறகு மத்திய தன்னாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள அனைத்து  ஊழியர்களும் NPS அரசாங்கத் துறையின் கீழ் கட்டாயம் வருவார்கள். மே 1, 2009 முதல் வேற நீத்த துறையிலும் உள்ள தனி நபர்கள் தானாக முன்வந்து இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். NPS  திட்டத்தில் 18 வயது முதல் 60 வயதிற்குள் உள்ள அனைத்து இந்திய குடிமகனும் சேரலாம்.
money 4
இதில் 2 அக்கவுன்ட் உள்ளன, முக்கியமாக ஓய்வூதிய சேமிப்புக்கு தொடங்கப்படுவது அடுக்கு 1 அக்கவுண்ட். இந்த அக்கவுன்டில் குறைந்தபட்சம் ₹500 செலுத்தி  அக்கவுண்ட் திறக்க வேண்டும். இதில் வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80CCD (1B)'இன் படி வரி சலுகைகளை பெறலாம். மேலும் இந்த அடுக்கு 1 அக்கவுண்ட் உள்ளவர்கள், அவர்கள் பணிபுரிந்த ஆண்டுகளில் செலுத்தப்பட்ட கார்பஸில் 60 சதவீதத்தை ஓய்வு பெறும் போது திரும்ப பெற அனுமதிக்கப்படுகிறார்கள். இதில் மீதமுள்ள 40 சதவீதம் வருடாந்திர பணமாக மாற்றப்படுகிறது.
NPS
மத்திய தன்னாட்சி அமைப்புகளில் சாரா தனிநபர்கள் 25 வயதில் இந்த திட்டத்தில் சேர்ந்து, மாதம் ₹5,000 செலுத்தி வர வேண்டும், ஓய்வு பெறும் வரை இந்த பங்களிப்பு ₹21 லட்சம் இருக்கும். இதில் ஆண்டுக்கு எதிர்பார்த்த 10 சதவீத வருமானம் கிடைத்தால் மொத்த முதலீடு என்பது ₹1.87 கோடியாக வளரும். மேலும் இதில் மொத்த தொகையான ₹65 லட்சத்தை தவிர மாதாந்திர ஓய்வூதியமாக ₹1 லட்சம் பெறலாம். மேலும் இதை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள NPS இன் அதிகார பூர்வமான இணையதளத்தை அணுகவும்.