Movie prime

இன்று எந்தெந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தெரியுமா??

 
School leave
வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் 26 மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 1 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
cyclone
வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. அதனால் தமிழகம் மற்றும் புதுவையில், நவம்பர் 14 ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருச்சி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், தேனி, திருப்பத்தூர், கோவை, திருவாரூர், அரியலூர், நீலகிரி, கரூர், புதுக்கோட்டை, சேலம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, திருவண்ணாமலை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை  ஆகிய மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
rain
தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.