Movie prime

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

 
School leave
நீலகிரி மாவட்டத்திற்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளதை அடுத்து, மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அம்ரித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
nilagiri
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், பல இடங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. மேலும், தமிழக பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியால், அதி கனமழைக்கான, 'ரெட் அலர்ட்' விடப்பட்டுள்ளது.
rain
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யும். ஈரோடு, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், மிக கனமழையும் பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளதை அடுத்து, மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.