Movie prime

கனமழை காரணமாக, குற்றால அருவிகளில் குளிக்க தடை!!

 
kurralam falls
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும், தென்காசி, குற்றாலம் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. அதனால், அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால், வெள்ள ஆபாயம் ஏற்பட்டுள்ளது.
kutralam falls
இதன் காரணமாக, குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த வாரம் தடை விதிக்கப்பட்டு தற்போது தான் குளிக்க அனுமதித்த நிலையில், தற்போது மீண்டும் தடை விதித்து இருப்பதால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.