Movie prime

அதிர்ச்சி!! நடுவானில் பறந்து கொண்டிருந்த விமான பயணியின் கழுத்தில் பாய்ந்த குண்டு!!

 
myanmar incident
மியான்மர் நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் தரையிலிருந்து 3000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென குண்டு ஒன்று விமானத்தை துளைத்து இருக்கையில் அமர்ந்திருந்த பயணியின் கழுத்தில் பாய்ந்தது. அதில் அவர் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அதனால்,விமானம் லோகாவ்கில் தரையிறக்கப்பட்டு, அவரை உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து, விசாரணை நடத்தப்பட்டத்தில், குண்டு தாக்கி காயமடைந்த நபர் 27 வயதான பயணி, நாய்பிடாவ்யில் இருந்து லோகாவ்விற்கு பயணம் செய்துள்ளார் என்று அறியப்பட்டுள்ளது.
myanmar airlines
மேலும், குண்டு எப்படி விமானத்தில் பாய்ந்தது, யார் இந்த செயலை செய்திருப்பார் என்று விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. தற்போது, முதற்கட்டமாக லோகாவ் நகரத்திற்கு வரும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

விமானத்தை குண்டு துளைத்த இடமும், காயம் அடைந்தவரின் புகைப்படமும் ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அந்த புகை படத்தில், காயமடைந்த நபர் கழுத்தில் ரத்தம் சொட்டச் சொட்ட கையில் ஒரு காகிதத்தை வைத்து இருக்கையில் அழுத்திப்பிடித்திருப்பது தெரிகிறது.

தொடர்ந்து, மியான்மர் ராணுவ அரசு, இந்த செயலை செய்தது ராணுவ ஆட்சியை எதிர்க்கும் கயா மாநில புரட்சிப் படை என்று கூறியுள்ளது. ஆனால், அவர்கள் இந்த செயலை நிராகரித்துவிட்டனர். மேலும், மியான்மர் ராணுவ அரசின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ஜாவ் மின் துன் கூறும் போது, இது ஒரு தீவிரவாத செயல் என்று தெரிவித்துள்ளார்.
myanmaer miltary government
அந்த வகையில், இந்த செயல் கரேன்னி தேசிய முற்போக்கு கட்சியால் நடத்தப்பட்டுள்ளது என்று மாநில ஊடகத்திடம் கூறியுள்ளார். கரேன்னி தேசிய முற்போக்கு கட்சி மியான்மரை ராணுவ ஆட்சி கைப்பற்றியதை எதிர்த்து புரட்சி அமைப்பாக செயல்பட்டு கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மியான்மரின் ஊடகத்தின் தகவல் படி, அந்த ஏடிஆர்-72 விமானம் 63 பயணிகளை ஏற்றிச் சென்றது என்று அறியப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு ஆங் சான் சூகி -யின் மக்கள் ஆட்சியை கவிழ்த்து ராணுவம் ஆட்சியை பிடித்துள்ளனர். தொடர்ந்து, மியான்மர் நாட்டில் பல்வேறு புரட்சி படைகள் தோன்றி ராணுவ ஆட்சியை எதிர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது