பரபரப்பு!! திடீரென சாலையில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பேருந்து!!
Jan 30, 2023, 10:18 IST

தமிழ்நாட்டின் கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு நோக்கி சென்ற ஆம்னி பேருந்து சேலம் அருகே தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாக நெடுஞ்சாலையில் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள், ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்படுவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

நேற்று முன்தினம் சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்று உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்வின் தாக்கம் குறைவதற்குள், அடுத்த நாளே ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற ஆம்னி பேருந்து சேலம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால், பேருந்தில் இருந்து வெளியேற முயன்ற பயணிகளில் 11 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.