Movie prime

ஆதார் அட்டையுடன் மின் இணைப்பை இணைக்க கூடுதல் அவகாசம்!! மின் வாரியம் உத்தரவு!!

 
adhaar, electricity
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (Tangedco) புதிய மின் இணைப்புகளுக்கு ஆதார் அட்டைகளை இணைக்க வேண்டும் என்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் உத்தரவிட்டுள்ளது.
adhaar
தற்போது, மின் நுகர்வோர் மின் இணைப்பை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று அரசாணை வெளியிட்டுள்ளது. ஆதார் சட்டம் 2016 பிரிவு 7 இன் கீழ் மானியம் பெறும் அனைத்து மின் நுகர்வோர்களும் மின் இணைப்பை ஆதாருடன் இணைக்க வேண்டும்.

இந்நிலையில், ஆதார் கார்டை மின் இணைப்பில் இணக்கத்தவர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனால், ஆதார் - மின் இணைப்பு எண்ணை இணைக்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
electricity
நவம்பர் மாதம் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்துவோருக்கு கூடுதலாக இரண்டு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்த பிறகே மின் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.