Movie prime

ரசிகர்கள் அதிர்ச்சி!! விஜயகாந்துக்கு ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தம், உடலில் இருந்து நீக்கப்பட்ட 3 விரல்கள்!!

 
vijayakanth
சமீப காலமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வரும் விஜயகாந்துக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. தனது சிறந்த நடிப்பு திறமையால் திரையுலகிலும், மக்கள் மனதிலும் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்று தந்திருக்கிறது.
vijayakanth
மேலும், இவர் நடித்த பல படங்கள் பல நாட்கள் திரையரங்குகளில் ஓடி மிக பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இவர் கடைசியாக 2010 ஆம் ஆண்டு வெளியான விருதகிரி என்ற படத்தில் நடித்திருந்தார். மேலு, 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நடிப்பு மட்டுமின்றி அரசியலிலும் களமிறங்கிய விஜயகாந்த் தேமுதிக என்ற கட்சியையும் ஆரம்பித்து நல்ல முறையில் அரசியலிலும் செயல்பட்டு வந்தார். சமீபகாலமாக அவருக்கு அடிக்கடி அதிகமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் படங்களிலும் நடிக்க முடியாமல் போனது, மேலும், நேரடி அரசியலில் இருந்தும் சிறிது காலம் விலகி இருந்தார். இருந்த போதிலும், கட்சி பணிகளையும், மக்கள் பணிகளை முடிந்த அளவு செய்து வந்தார்.
vijayakanth webp
உடல் நலக்குறைவு காரணமாக அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த ஜூன் 14 ஆம் தேதி, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் கவலை அதிகரித்தது. எனினும், சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்பிவிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

விஜயகாந்திற்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாததால், அறுவை சிகிச்சை மூலம் காலில் உள்ள 3 விரல்களை அகற்றியுள்ளார்கள் என்ற செய்தி வெளியாகி தற்போது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது அவர் நலமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது ரசிகர்கள் விஜயகாந்த் விரைவில் நலமுடன் திரும்பி வர வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.