Movie prime

2500 அரசு பேருந்துகளில் இன்று முதல் கண்காணிப்பு கேமரா!! முதலமைச்சர் தொடங்கி வாய்ப்பு!!

 
bus strike
தமிழகம் முழுவதும் 20304 அரசு பேருந்துகள் 10,417 வழித்தடங்கள் மூலம் இயங்கி வருகிறது.இந்த பேருந்துகளில்  சுமார் ஒரு கோடியே ஏழு லட்சம் பேர் தினமும் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு  இலவசம்,மற்றும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசம் போன்ற திட்டங்களால் பொதுமக்கள் நன்றாக பயனடைந்து வருகின்றனர்.

பெண்களுக்கு இலவச பயண திட்டம் அறிமுகமான பிறகு பொது பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை 40 சதவீதத்தில் இருந்து 62 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இந்நிலையில் பேருந்துகளில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்கும் விதமாக அரசு பேருந்துகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக 22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2,500 மாநகர பேருந்துகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அவசர கால எச்சரிக்கை பட்டனும் பேருந்தில் இடம் பெற்றுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து உள்ளது, இந்நிலையில் மாநகர பேருந்துகளில் சிசிடிவி பயன்பாடு இன்று முதல் செயல்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இதை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.