Movie prime

வெள்ள எச்சரிக்கை!! வைகை அணையில் இருந்து நீர் திறப்பு!! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!!

 
vaigai dam
வைகை அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையின் முழு கொள்ளளவான 70 அடியை எட்டியுள்ளது.
vaigai dam
வைகை அணைக்கு தற்போது 2,735 கன அடி நீர் வரத்து உள்ளது. அந்த 2,735 கன அடி நீரும், அணையின் மேல் முதுகு வழியாக அப்படியே வெளியேற்றப்படுகிறது.
vaigai river
அதன் காரணமாக, அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருவதால் வைகை ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.