Movie prime

கொள்ளிடம் ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை!!

 
kolidam river
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தஞ்சை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
kollidam
மேட்டூர் அணையின் நீர்மட்டத்தை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் மொத்த உபரி நீரும் முழுவதுமாக தீட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, தஞ்சை கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அப்பகுதி மக்களுக்கு வெள்ளப்பெருக்கு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆற்றங்கரையோரம் இருக்கக்கூடிய வீடுகளில் தண்ணீர் புகக்கூடிய சூழல் ஏற்பட்டால் அவர்களுக்கு தேவையான நிவாரண முகாம்கள் நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
flood
ஏற்கனவே 4 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. வெள்ளம் புகக்கூடிய சூழ்நிலையில் பொதுமக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். செலஃபீ எடுக்கும் ஆசையில் கவண் சிதறலுடன் அபாயத்தை விளைவிக்க கூடிய செயல்களை செய்யக்கூடாது.

மேலும், ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, செலஃபீ எடுக்கவோ வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.