Movie prime

ரேஷன் கடைகளில் நாளை முதல் கேஸ் சிலிண்டர்!!

 
gas cylinder in ration shop
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் நாளை முதல் 5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படும். தமிழக ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு அரிசி உட்பட உணவு தானியங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.
5 kg cylinder
மத்திய அரசு ரேஷன் கடைகள் மூலம் சிலிண்டர் விநியோகம் செய்யும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அறிவித்திருந்தது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் நாளை அக்டோபர் 6 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில்  5 கிலோ சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ration shop
இந்த தகவல் கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். மேலும் அவர், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் வெளிமாநில, வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எந்த பகுதியில் உள்ளனரோ அங்கு ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.