Movie prime

பாஜகவிலிருந்து விலகிய காயத்ரி ரகுராம்!! அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!!

 
gayathri raguram
நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து விலகுவதாக தனது சமூகவலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக காயத்ரி ரகுராம் இருந்து வந்தார்.
gayathri raguram
இதனிடையே கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக கூறி கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்பட்டதாக கடந்த நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது.

கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக அந்த விதமான தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்திருந்தார். ஆனால், தன் மீது அன்பு கொண்டவர்கள் பேசிக் கொண்டு தான் இருப்பார்கள், அதை யாராலும் நிறுத்த முடியாது, சஸ்பெண்ட் செய்யப்பட்ட போதும், நாட்டுக்காக உழைப்பேன் என்று காயத்ரி ரகுராம் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, தமிழக பாஜக தலைமையை ஊடகங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
gayathri raguram, annamalai
இந்நிலையில், காயத்ரி ரகுராம் இன்று  தனது சமூகவலைதள பக்கத்தில், பெண்களுக்கு மரியாதை, சம உரிமை இல்லாத தமிழ்நாடு பாஜகவில் இருந்து வெளியேறும் முடிவை கனத்த இதயத்துடன் எடுக்கிறேன் என்று கூறி தமிழக பாஜக தலைமை மற்றும் தலைவர் குறித்து குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், பிரதமர் மோடி இந்தியாவின் தந்தை, அவர் எப்போதும் சிறப்புக்குரியவர் என்றும் அவர் எப்போதும் என்னுடைய விஸ்வகுரு என்றும் குறிப்பிட்ட காயத்ரி ரகுராம், அமித்ஷா என்னுடைய சாணக்கிய குருவாக  எப்போதும் இருப்பார் என்றும் கூறியுள்ளார். 8 ஆண்டுகளாக தன்னுடன் பயணித்த அனைத்து பாஜகவினருக்கும் நன்றியும் கூறியுள்ளார்.