Movie prime

பிஎஸ்என்எல் பயனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

 
5 g
இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் 26 ஆம் தேதி 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் தொடங்கி 7 நாட்கள் நடந்தது. இந்த ஏலத்தில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் டேட்டா ஒர்க்ஸ் லிமிடெட் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஏலத்தில் ஜியோ நிறுவனம் அதிக அளவில் அலைக்கற்றைகளை வாங்கியுள்ளதாக தகவல்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற 6 ஆவது இந்திய கைபேசி மாநாட்டில் பிரதமர் மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
5g
முதற்கட்டமாக டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட 13 நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகம் செய்து வைத்தார். இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்கிய முதல் நிறுவனம் என்ற பெருமையை பார்தி ஏர்டெல் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, தசரா பண்டிகையை முன்னிட்டு ஜியோ நிறுவனம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, வாரணாசி ஆகிய 4 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கியது. மேலும், வோடஃபோன் ஐடியா மற்றும் அதானி டேட்டா ஒர்க்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களும் விரைவில் 5ஜி சேவையை தொடங்கும் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.
bsnl
இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவை தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு நவம்பர் முதல் பிஎஸ்என்எல் பயனர்களுக்கு 4ஜி சேவை கிடைக்கும் என்று பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் உறுதியளித்துள்ளார்.

இதனால், பிஎஸ்என்எல் நெட்வொர்க்கை பயன்படுத்துபவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி சேவையையும் வழங்க உள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.