Movie prime

கூகுள் அதிரடி!! மருத்துவர்களின் கையெழுத்தை புரிந்து கொள்ள அப்டேட்!!

 
google doctor handwriting
பொதுவாக தெருமுனையில் உள்ள கிளினிக்கில் இருக்கும் மருத்துவர் தொடங்கி பெரிய பெரிய மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இருக்கும் மருத்துவரின் கையெழுத்து வரை யாருக்கும் எளிதில் புரிந்து விடுவதில்லை. நம் உடம்பில் உள்ள நோயைக் கூட கண்டுபிடிச்சிடலாம், மருந்து சீட்டில் உள்ள மருத்துவரின் கையெழுத்தை புரிந்து கொள்வது அரிதான காரியம்.
doctor prescription
இந்த பிரச்சனைகளை தீர்க்க கூகுள் ஒரு புதிய அப்டேட்டை செய்து வருகிறது. சமூக வலைதள மென்பொருள் தேடல் நிறுவனங்களில் முதல் இடத்தில் இருப்பது கூகுள் நிறுவனம். கூகுள் நிறுவனம் கோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்காகவும், கூகுளை தொழில்நுட்ப அடிப்படையில் மேம்படுத்தவும் பல மாற்றங்களையும், செயல்பாடுகளையும் கூகுள் நிறுவனம் அவ்வப்போது செய்து வருகிறது.  

தற்போது, மருத்துவரின் கையெழுத்தை எளிதாக அடையாளம் காணும் வகையில் கூகுள் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுள் லென்ஸ் பயன்படுத்தி மருத்துவர்கள் கையெழுத்தை ஸ்கேன் செய்து உள்ளிட வேண்டும்.  இந்த வசதி மூலம் மருத்துவர்களின் கையெழுத்தை ஸ்கேன் செய்து அதில் உள்ள மருந்துகளின் பெயரை சரிபார்த்து கொள்ளலாம்.
google lens
ஆனால், இவ்வாறு தெரிந்து கொள்ளப்படும் மருந்துகளின் பெயர் 100 சதவீதம் உண்மை என்று கூகுள் எந்த ஆதாரமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை பயனர்கள் மருந்து கடைகளில் வாங்கும் மருந்துகளை சரிபார்ப்பதற்கு  பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூகுள் விளக்கம் அளித்துள்ளது.