கூகுள் எச்சரிக்கை!! கடினமாக உழைக்க ஊழியர்களுக்கு எச்சரிக்கை!!

கனமாக உழைக்க வேண்டும் இல்லையென்றால் வேலையில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்று கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய மட்டுமல்லாமல் உலகம் முழுதும் உள்ள பல கோடி மக்கள் பணிபுரியும் நிறுவனம், கூகுள். தற்போது, கூகுளில் வேலை மந்தமாக நடைபெறுவதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் கூகுளின் டெக்னாலஜி பக்கம் மிகவும் தாமதமாக வேலை செய்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதை உறுதிப்படுத்தும் விதத்தில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை வேலை குறைவாக இருக்கிறது, ஊழியர்கள் அதிகமாக உள்ளார்கள், வேகம் தேவை என்று ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.
சமீபத்தில் கூகுள் நிறுவனம் ஊழியர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, கடந்த சில மாதங்களாக புதிய வளர்ச்சியோ, புதிய திட்டங்களோ இல்லை என்றும் கடின உழைப்பு வேண்டும் இல்லையெனில் வேலையை விட்டு விலகி விடலாம் என்று கூறப்பட்டுள்ளது.