Movie prime

தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!! உலமாக்களின் ஓய்வூதிய வயது 40 ஆக குறைப்பு!!

 
tn l a
தமிழநாட்டு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 2022-23 ம் ஆண்டுக்கான கூட்டத்தொடரின் போது,மாற்றுத்திறனாளி உலமாக்களுக்கான ஓய்வூதியம் குறித்து அறிவிப்பு ஒன்று அறிவிக்கப்பட்டது.
M.K.Stalin
அந்த அறிவிப்பின் படி, உலமாக்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான வயது 50 லிருந்து 40 ஆக குறைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளி உலமாக்களுக்கான ஓய்வூதியம் பெறும் வயது குறைக்கப்பட்டது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
muslim ulemas
அந்த அரசாணையில், ஓய்வூதியம் பெறுவதற்கான வயது வரம்பு 50 லிருந்து 40 ஆக குறைத்து தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பாக, மௌலவி,பேஷ் இமாம்,மோதினார்கள் உள்ளிட்ட உலமாக்களுக்கு உலமா ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.

தற்போது உலமாக்களுக்கு மாதம் ரூ.3000/- உலமா ஓய்வூதியம் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், ஓய்வூதியம் பெறுவதற்கான வயது வரம்பு 50 லிருந்து 40 ஆக குறைக்கப்பட்டிருப்பது உலாமாக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.