குரூப் 1 தேர்வு அறிவிப்பு வெளியீடு!! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!
Jul 21, 2022, 07:37 IST

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும், உள்ள காலிப்பணியிடங்களுக்கு பல்வேறு தேர்வுகளை வைத்து பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில், பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பின் படி, துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரக வளர்ச்சித் துறை துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 6 பதவிகளில் 92 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி வரை இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நிலை தேர்வு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி நடைபெறும் என்றும் முதன்மை தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
மேலும், தகவல்கள் தெரிந்துகொள்ள மற்றும், தேர்வுக்கு விண்ணப்பிக்க http://tnpsc.gov.in என்ற டிஎன்பிஎஸ்சியின் அதிகாரபூர்வமான இணையதளத்தை பார்க்கவும்.