Movie prime

மகிழ்ச்சியான செய்தி!! 618101 பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள்!!

 
cycles
தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலனுக்காக பல நல்ல சலுகைகளை அவ்வப்போது செய்து வருகிறது. அந்த வகையில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு கல்வி ஆண்டிற்கான மிதிவண்டிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் இது குறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த குறிப்பின் படி 2021-2022 கல்வி ஆண்டிற்கான மிதிவண்டிகள் இன்னும் 3 மாதத்திற்குள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் அடிப்படையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் தொழிற்பயிற்சி  பயிலும் மாணவ, மாணவிகள் என அனைவருக்கும் மிதி வண்டிகள் வழங்கப்படும்.

இதற்காக மொத்தம் 618101 மிதிவண்டிகள் ஒப்பந்தம் செய்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அந்த மிதிவண்டிகள் அடுத்த 3 மாதத்திற்குள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.