Movie prime

கடும் கொரோனா ஊரடங்கு!! சீனாவில்!! அத்தியாவசிய பொருட்களுக்கு கையேந்தும் மக்கள்!!

 
china lockdown
சீனாவில் கொரோனா பரவ தொடங்கிய உடனே கடுமையான ஊரடங்கு உத்தரவுகளை அந்நாட்டு அரசு பிறப்பித்து நோய்த் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தது. பிற உலக நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட கொண்டிருந்த போதே சீனா அதில் இருந்து வெளி வந்தது.
chine lockdown
தற்போது, மீண்டும் சீனாவில் நடந்து வரும் ஆண்டில் ஜனவரி மாதம் முதலே படிப்படியாக கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கின. ஷாங்காய் உள்ளிட்ட பெரு நகரங்களில் ஊரடங்கு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டன.

இதன் காரணமாக, மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. பொருளாதார மற்றும் உளவியல் ரீதியாக மக்கள் கடுமையாக பெரிதாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
covid test
சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் கடுமையான கொரோனா கொள்கையால் பீஜிங் போன்ற நகரங்களில் 3 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா தொற்று இல்லை என்ற முடிவுகளை பெறும் குடியிருப்புவாசிகளை, உணவு விடுதிகள், கட்டிடங்கள் மற்றும் பிற பொது இடங்களில் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால், பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்க நேரிடுகிறது. இதனால், மக்கள் அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் மருத்துவ உதவிகளுக்கு கூட வீட்டிலேயே காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.