Movie prime

தமிழகத்தில் மீண்டும் கனமழை!! எந்த மாவட்டங்களுக்கு எல்லாம் அலெர்ட்??

 
cyclone of bay of bengal
தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வரும் 20 ஆம் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்று முதல் 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், 20 ஆம் தேதி தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
rain
மேலும் தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, 21 ஆம் தேதி புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
rain
அது மட்டுமின்றி, மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில், இன்று 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும், அந்தமான் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.