Movie prime

இன்று கனமழை எந்த மாவட்டங்களுக்கு எல்லாம் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை??

 
leave
வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வந்தது.
rain
அந்த வகையில், இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மானாம்பதி (திருப்போரூர் ஒன்றியம்), ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வடகால் (காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், அரசு மேல்நிலைப்பள்ளி அனகாபுத்துர் ( புனித தோமையார் மலை ஒன்றியம்), அரசு உயர்நிலைப்பள்ளி நன்மங்கலம் (புனித தோமையார் மலை ஒன்றியம்), ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நன்மங்கலம் (புனித தோமையார் மலை ஒன்றியம்) ஆகிய 5 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
School leave
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் (மாங்காடு உட்பட) வட்டத்திற்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.