Movie prime

கனமழை எச்சரிக்கை!! 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

 
rain
தமிழ்நாட்டில் கோடை காலத்திற்கு பிறகு ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் நிலவி வரும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் நீடிக்கும், என்றும் இன்று இன்னும் 2 மணி நேரத்தில், 20 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை ஆய்வு மையம் தகவல்.
rain
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம் , புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும், இடி மின்னலும் சூறைக்காற்றும் வீசக்கூடும் என்றும், இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
rain
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், ஈரோடு , மதுரை, கிருஷ்ணகிரி, தர்மபுரி திருப்பத்தூர், சேலம், கரூர், நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.