வரும் 8 ஆம் தேதி 9 மாவட்டங்களுக்கு விடுமுறை!!
Sep 4, 2022, 10:06 IST

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னரே, சென்னை மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது, 9 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலானவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

திருவோணம் பண்டிகையின் கடைசி நாள் கொண்டாட்டம் வரும் 8 ஆம் தேதி கேரளா மக்களால் கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்திலும் உள்ள மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடும் விதமாக ஏற்கனவே சென்னை, திருப்பூர், கோவை, கன்னியாகுமரி, மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஈரோடு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.