Movie prime

10, 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் விடைத்தாள்கள் மறுகூட்டல்/மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிப்பது எப்படி??

 
students
இன்று 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் மொத்தம் 8,06,277 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 93.76 ஆகும். மேலும் 10 ஆம் வகுப்பின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 90.07 ஆகும்.

பாடப்பிரிவுகளில் தங்கள் மதிப்பெண்களில் திருப்தி அடையாத மாணவர்கள் அல்லது தேர்ச்சி பெறாத மாணவர்கள் மதிப்பெண் மறுகூட்டல் அல்லது விடைத்தாள்கள் மறுமதிப்பீடு திட்டத்தை அரசுத் தேர்வுகள் இயக்ககம் மேற்கொண்டு வருகிறது. மாணவர்களின் விண்ணப்பங்கள் அடிப்படையில் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது.
exam
ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள் நகலை பெற்றுக் கொண்ட மாணவர்கள், தங்களுக்கு மதிப்பெண்கள் கூடுதலாக வர வாய்ப்புள்ளது என்று நினைத்தால் மறுகூட்டல்/மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், கூடுதல் மதிப்பெண்கள் கிடைத்தால், அதன் அடிப்படையில் திருத்தப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.

அதுமட்டுமின்றி, மறுமதிப்பீடு மூலம் மதிப்பெண்கள் குறையவும் வாய்ப்புள்ளது என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். மறுமதிப்பீடு செய்யாமல் விடைத்தாளின் நகளுக்கு மட்டும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாணவர்கள் தாங்கள் விரும்பிய மேல்படிப்புகளின் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சேர்க்கை பெற ஏதுவாக, மறுகூட்டல்/மறுமதிப்பீடு  நடைமுறையை தேர்வுகள் இயக்ககம் விரைவாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் மேற்கொண்டு வருகிறது.

மேலும், ஆண்டுதோறும் சராசரியாக 1 லட்சம் மாணவர்கள் இந்த திட்டத்தின் பலன்களை அனுபவித்து வருகின்றனர்.