Movie prime

இல்லத்தரசிகளுக்கு மாதம் ₹1000 திட்டத்தை குறித்து முக்கிய அறிவிப்பு!! நிதி அமைச்சர் தகவல்!!

 
இல்லத்தரசிகளுக்கு மாதம் ₹1000 திட்டத்தை குறித்து முக்கிய அறிவிப்பு!! நிதி அமைச்சர் தகவல்!!
கடந்த ஆண்டு நடந்து முடிந்த தேர்தலில் திமுக கட்சியின் அறிக்கையில் இல்லத்தரசிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ 1000 வழங்கப்படும் என அறிவித்திருந்தது. தற்போது, திமுக பதவிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்த உள்ளது. இந்நிலையில், தாமதமாகும் திட்டங்கள், அதற்கான காரணங்கள், மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் துறை வாரியாக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
money
இந்த ஆலோசனையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேம்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். இன்று  மதுரையில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார். அந்த குறிப்பில், குடும்பத் தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ₹1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என அறிவித்துள்ளார்.
finance minister
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த அதற்கான தேவையான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் நடைமுறைப் படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும், அதற்கான தீவிர ஆலோசனைகள், சாத்தியக்கூறுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.