Movie prime

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை!! வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மையம்!!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
cyclone
வங்கக் கடலில் உருவாகி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, பருவமழை மேலும் தீவிரமடையும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக ஒடிசாவில் சில பகுதியில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்றும் ஆகஸ்ட் 6 முதல் 10 வரை ஒடிசாவில் பரவலாக மழை பெய்யும் என்றும், வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ முதல் 50 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்றும் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
rain
இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வடமேற்கு வங்கக் கடல் மற்றும் ஒடிசா கடற்கரை பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தென்மேற்கு பகுதியில் நகர்ந்து அடுத்து 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ் பகுதியாக வலுப்பெறும் என்றும் அறிவித்துள்ளது.
rain
இதன் காரணமாக மத்திய மற்றும் வட இந்தியப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வால் தமிழ்நாட்டுக்குப் பெரிய அளவில் மழை பொழிவு இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.