Movie prime

சீன அதிபர் கைது உண்மையா?? ஆட்சி கவிழ்க்கப்பட்டதா??

 
xi jing ping
சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு உள்ளது, அவர் தற்போது வீட்டுக் காவலில் உள்ளார், போன்ற தகவல்கள் இணையத்தில் பெருமளவில் பரவி வருகிறது. இந்நிலையில், அதன் உண்மை என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சீன நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலரும், சீனாவின் அதிபருமான ஜி ஜின்பிங்-கின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. மேலும், அவர் தற்போது பெய்ஜிங்கில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்கள் ஒன்றிணைந்து அவரை பதவியில் இருந்து இறக்கி விட்டனர் என்ற தகவல் சீனா சமூக வலைத்தளத்தில் காட்டு தீ போல் வேகமாக பரவி வருகிறது.
xi jing ping
சீனாவில் மட்டுமின்றி உலக அளவில், இந்த தகவல் பெருமளவில் பரவி வருகிறது. இந்நிலையில், உண்மையில் பெய்ஜிங்கில் நடந்தது என்ன என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. பெய்ஜிங் பகுதி முழுமையாக ராணுவத்தால் கைப்பற்றப்பட்டு மூடப்பட்டுள்ளது என்ற புகார் சமூக வலைதளத்தில் முன் வைக்கப்படுகிறது.

இதையடுத்து, மத்திய பாதுகாப்பு பணியகத்தின் கட்டுப்பாட்டை சீன முன்னாள் அதிபர் ஹூ ஜின்டோ மற்றும் பிரதமர் வென் ஜிபாவோ இணைந்து எடுத்துக் கொண்டதாகவும் தகவல் வெளியானது. மேலும், கடந்த 16 ஆம் தேதி அதிபர் ஜி ஜின்பிங் sco மாநாடு முடித்து பெய்ஜிங் வந்த போது அவரை விமான நிலையத்தில் வைத்து அழைத்து சென்று வீட்டுக் காவலில் வைத்துள்ளனர் என்று கூறி வருகின்றனர்.

சில சீன மக்கள் பெய்ஜிங் வெளிப்பகுதியில் தென்படும் ராணுவ வாகனங்களைக் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இவ்வாறு சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ள தகவல்களில் எது உண்மை என்று தெரியாமல்  மக்கள் குழம்பியுள்ள நிலையில், இவை அனைத்தும் சமூக வலைதளத்தில் பரவும் வதந்திகள் என்று தெரிய வந்துள்ளது. சீனாவின் அதிகாரபூர்வமான இணையத்தளத்தில் இது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.