ஜனவரி மாதம் 4 ஆம் தேதி விடுமுறை!! ஆட்சியர் அறிவிப்பு!!

தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் வரும் ஜனவரி மாதம் 4 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தை உள்ளூர் திருவிழாவோடு சேர்த்து கொண்டாடுகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும், படுகர் இன மக்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஹெத்தையம்மன் கோவில் திருவிழா இந்த வருடம் ஜனவரி 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கொண்டாட்டங்களில் உள்ளூர் மக்கள் முழு மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் வண்ணம் ஜனவரி 4 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஹெத்தையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 4 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் மற்றும் அரசு ஊழியர்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார். அதே சமயம் கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் மட்டும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜனவரி 4 ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில், ஜனவரி 21 ஆம் தேதி மாதத்தின் 3 ஆவது சனிக்கிழமை நீலகிரி மாவட்டத்தில் வேலை நாளாக இருக்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.