நகை பிரியர்கள் அதிர்ச்சி!! கிடுகிடுவென உயர்ந்து வரும் தங்கத்தின் விலை!!

சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதன்படி, தங்கத்தின் விலை மாறி மாறி ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், தற்போது தங்கத்தின் விலை தொடர்ந்து அதிரடியாக அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், இன்று ஆபரணத் தங்கம் கிராமுக்கு ₹60 அதிகரித்துள்ளது. அதனால், நேற்று ₹5,040 க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் ஆபரணத் தங்கம் இன்று ₹5,100 க்கு விற்கப்படுகிறது. மேலும், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலையும் ₹480 அதிகரித்துள்ளது. இதனால், நேற்று ₹40,320 க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ₹40,800 க்கு விற்கப்படுகிறது.
வெள்ளியின் விலையிலும் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, இன்று வெள்ளி ஒரு கிராமுக்கு ₹1 அதிகரித்துள்ளது. இதனால், நேற்று ₹73 க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் வெள்ளி இன்று ₹74 க்கு விற்கப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ₹74,000 ஆக உள்ளது.