நகைப்பிரியர்கள் உற்சாகம்!! தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை!!

சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதன்படி, தங்கத்தின் விலை மாறி மாறி ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக அதிரடியாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை தற்போது, படிப்படியாக குறைந்து வருகிறது.
இந்நிலையில், இன்று ஆபரணத் தங்கம் கிராமுக்கு ₹10 குறைந்துள்ளது. அதனால், நேற்று ₹5,305 க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் ஆபரணத் தங்கம் இன்று ₹5,295 க்கு விற்கப்படுகிறது. மேலும், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலையும் ₹80 குறைந்துள்ளது. இதனால், நேற்று ₹42,440 க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ₹42,360 க்கு விற்கப்படுகிறது.
வெள்ளியின் விலையிலும் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, இன்று வெள்ளி ஒரு கிராமுக்கு ₹0.50 குறைந்துள்ளது. இதனால், நேற்று ₹75.30 க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் வெள்ளி இன்று ₹74.80 க்கு விற்கப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ₹74,800 ஆக உள்ளது.