Movie prime

தமிழ்நாட்டில் இன்று முதல் ஜியோ 5ஜி சேவை!! 6 நகரங்களில்!!

 
jio 5g
இந்தியாவின் முதன்மையான இணையச் சேவை நிறுவனங்களில் ஒன்றான ஜியோ நிறுவனம் இணையப் புரட்சியாக இந்தியாவில் அதிக வேக ட்ரு 5ஜி இணைய சேவையை தொடங்கி உள்ளது. இந்தியாவில் அனைத்து மக்களுக்கும்  கிடைக்கும் அதிவேக 5ஜி சேவை வழங்குவதையே இலக்காக வைத்து செயல்படுவதாக ஜியோ நிறுவனம் தெரிவித்திருந்தது.
5g
நாடு முழுவதும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி அதிவேக 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன் முதல் கட்டமாக நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை, அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், டெல்லி, காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே ஆகிய இடங்களில் இதுவரை 5ஜி சேவை செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
5 g
அதை தொடர்ந்து, ஜியோ நிறுவனம் டெல்லி,மும்பை, வாரணாசி, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், சென்னை, புனே, குருகிராம், நொய்டா, காசியாபாத், பரிதாபாத் மற்றும் குஜராத் ஆகிய பகுதிகளில் உள்ள 33 மாவட்டங்களில் 5ஜி சேவை வழங்கி வருகிறது.
jio 5g
2030 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் அனைத்து கிராமங்களிலும் 5ஜி சேவையை கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளதாக ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.