Movie prime

கனமழை காரணமாக இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

 
leave
தமிழக பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியால், அதிக கனமழைக்கான, 'ரெட் அலர்ட்' விடப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், பல இடங்களில் மிக கனமழை பெய்து வருகிறது.
rain
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யும். ஈரோடு, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், மிக கனமழையும் பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாகவே, நீலகிரி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவித்து அந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். தற்போது, கன்னியாகுமாரி மாவட்டத்திற்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
rain
வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்டவை ஏற்படும்போது, துரிதமாக செயல்படுவதற்காக அதிநவீன படகு மற்றும் மீட்பு உபகரணங்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைத்துள்ளனர்.