Movie prime

கேரள நிலச்சரிவு, சடலமாக மீட்கப்பட்ட 3 உடல்கள்!!

 
idukki
கேரள மாநிலம் இடுக்கி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மண்ணில் புதைந்து உள்ளனர். அந்த ஐவரில் 3 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
landslide
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி, மலப்புரம், பத்தனம் திட்டா ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதேபோல் தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் சில பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
rain
கேரள மாநிலம் இடுக்கி பகுதியில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதில் இடுக்கி மாவட்டம் குடையத்தூர் பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மண்ணில் புதைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

அப்பகுதியில் பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த சோமன் அவரது மனைவி, அம்மா, மகள் மற்றும் பேத்தி என்று 5 நபர்கள் மண்ணில் புதைந்துள்ளனர். அவர்களை தீவிரமாக தேடும் மீட்பு பணி நடந்து வருகிறது.
iduki
மேலும், இதுவரை 3 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மீட்பு படையினர் அறிவித்துள்ளனர். மேலும் இருவரின் உடல்களை தேடும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கோட்டயம், பத்தனம் திட்டா, இடுக்கி ஆகிய மாவட்டங்களில் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் நகர பகுதியிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.