Movie prime

சூறாவளி காற்றுடன் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

 
cyclone of bay of bengal
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இது மெதுவாக இலங்கை கடற்கரையை நோக்கி நகரக் கூடும். அதன் காரணமாக, அடுத்த 4 நாட்கள் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
rain
இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
cyclone
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் ஆகிய அளவில் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.