அமைச்சர் துரைமுருகன் மருத்துமனையில் அனுமதி!!
Dec 25, 2022, 07:18 IST

திமுக கட்சியின் பொதுச்செயலாளரும், மாநில நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவர் 1971 ஆம் ஆண்டு முதல் மாநில சட்டசபை தேர்தலில் இதுவரை சென்னை காட்பாடி தொகுதியில் 12 முறை போட்டியிட்டு 10 முறை வெற்றிபெற்று 10 முறை தமிழக சட்டசபை உறுப்பினராக பதவி வகித்துள்ளார். இவர் இதற்கு முன்னர் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு சாந்தகுமாரி என்ற மனைவியும், கதிர் ஆனந்த என்று ஒரு மகனும் உள்ளனர். தற்போது, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வந்த இவர் காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.