Movie prime

அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்!! மகளிர் சுய உதவி குழுக்களுக்கு திமுக ஆட்சியில் ₹2,755 கோடி கடன் தள்ளுபடி!!

 
state minister i periyasamy
மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் இதுவரை பெற்ற சுமார் ₹2,755 கோடி கடன் திமுக ஆட்சியில் தள்ளுபடி  செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார். சென்னை, தேனாம்பேட்டையில் புதிதாக கட்டப்பட்ட காமதேனு திருமண மண்டபத்தை கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
Money
அப்போது, கூட்டுறவு துறையின் மூலம் மக்களுக்கு சிறப்பான சேவை செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாக, 5 சவரன் வரை கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் பெற்ற கடன்களுக்கு நாட்டிலேயே இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் சுமார் ₹2,755 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
M.K.Stalin
மேலும், சுமார் ₹12,000 கோடி அளவுக்கு முந்தைய அரசால் அறிவிக்கப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடியை முதல்வர் செய்துள்ளார். அரசு. கூட்டுறவு ஊழியர்களுக்கு கிட்டத்தட்ட அரசு ஊழியர்களுக்கு நிகராக ஊதியம் மற்றும் 28% அகவிலைப்படி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.