Movie prime

2 குழந்தைகளை இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்த தாய்!!

 
suicide
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள அத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி கனகசம்பத் (45). இவருக்கு ரேவதி என்கிற பேபி (40) என்கிற மனைவியும், ஹர்ஷிதா (13) என்ற மகளும், கலைவேந்தன் (7) என்ற மகனும் உள்ளனர்.

இவர்களுக்கு ஊரை ஒட்டியுள்ள தோட்டத்து சாலையில் மற்றொரு வீடும் உள்ளது. ஹர்ஷிதா அங்குள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பும், கலைவேந்தன் 2 ஆம் வகுப்பும் படித்து வந்துள்ளனர். ரேவதிக்கு அதிக தலைவலி இருந்து வந்ததால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
head pain
அவருக்கு தலைவலி அதிகமாகும் போது மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் அவரது செயல்பாடு இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்ததும் குழந்தைகள் இருவரும் வீட்டிற்கு வந்துள்ளனர்.

வீட்டிற்கு வந்த குழந்தைகள், வீட்டில் சிறிது நேரம் விளையாடினர். மாலை 6 மணிக்கு மேல் கனகசம்பத் கடை வீதிக்கு சென்று விட்டார். இதனால் ரேவதியும், அவருடைய 2 குழந்தைகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.

அதன் பிறகு, தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ரேவதி ஊரை ஒட்டியுள்ள தோட்டத்து சாலை வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஒரு குழந்தை தாயின் இடது கையையும், மற்றொரு குழந்தை தாயின் வலது கையையும் பிடித்துக் கொண்டு மூவரும் சென்றுள்ளனர்.

கடைவீதிக்கு சென்ற கனகசம்பத் இரவு 7 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது ஊருக்குள் இருந்த வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. அதனால், தோட்டத்து சாலையில் உள்ள வீட்டிற்கு தனது மனைவியும் குழந்தைகளும் சென்று இருக்கலாம் என்று நினைத்து தோட்டத்து சாலை வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு தோட்டத்து சாலை வீட்டின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. தொடர்ந்து, மனைவியின் பெயரை சொல்லி கதவை திறக்குமாறு கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரமாக கதவு திறக்காததால் ஜன்னல் வாயிலாக வீட்டிற்குள் எட்டிப் பார்த்தார்.
poison
இரண்டு குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் இருக்க, ரேவதி கட்டிலில் படுத்திருந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த கனகசம்பத் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கியுள்ளார. குழந்தைகளின் அருகில் இரும்பு கம்பி ஒன்று இருந்துள்ளது.

கட்டிலில் படுத்து இருந்த ரேவதியின் அருகில் விஷபாட்டிலும் இருந்துள்ளது. அப்போது ரேவதி தனது கணவர் கனகசம்பத்திடம் 2 குழந்தைகளை கம்பியால் அடித்து விட்டு, தான் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளார்.

அதன் பிறகு, ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தைகளையும், விஷம் குடித்த ரேவதியையும் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு 2 குழந்தைகளையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அந்த குழந்தைகள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
beating
இதனைத் தொடர்ந்து, ரேவதிக்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பிறகு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக வெள்ளகோவில் காவல் துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற குழந்தைகளை தாயே கொடூரமாக கொன்று, தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.