Movie prime

4 குழந்தைகளை கிணற்றில் எறிந்து கொலை செய்த தாய்!!

 
suicide
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம் ஜிகல்புரா கொலா கிராமத்தாய் சேர்ந்தவர் பொத்ராம். விவசாயம் தொழில் செய்து வரும் இவருக்கு மதினா (32) என்ற மனைவியும், கோமல், ரிங்கு, ராஜ்வீர், தேவ்ராஜ் என்று 4 குழந்தைகளும் உள்ளனர்.

மதினாவுக்கும் அவரது கணவர் பொத்ராம் மற்றும் குடும்பத்தினர் இடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால், நேற்று மதினாவுக்கும் அவரது கணவர் குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. விரக்தியடைந்த மதீனா தன் 4 குழந்தைகளை அழைத்துக் கொண்டு கிராமத்திற்கு அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றுள்ளார்.
well
அந்த பகுதியில் உள்ள பழைய பாழடைந்த கிணற்றுக்குள் தனது 4 குழந்தைகளையும் வீசிய மதினா தானும் கிணற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மதீனாவும், குழந்தைகளும் வீட்டில் இல்லாததை அறிந்த உறவினர்கள் அவர்களை கிராமம் முழுவதும் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், கிராமத்திற்கு வெளியே இருந்த கிணற்றுக்குள் பார்த்தபோது குழந்தைகளுடன் மதீனா கிணற்றுக்குள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
rip
பின்னர், 5 பேரையும் ஊர் மக்கள் கிணற்றில் இருந்து வெளியே மீட்டனர். ஆனால், தண்ணீருக்குள் மூழ்கிய 4 குழந்தைகளும் உயிரிழந்த நிலையிலும், குழந்தைகளின் தாய் மதீனா உயிருடனும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.