Movie prime

மூணாறு நிலச்சரிவு!! தமிழக தொழிலாளர்கள் 450 பேர் தப்பினர்!! 2 வீடுகள் புதைந்தன!!

நேற்று அதிகாலை முன்னர் நிலச்சரிவு ஏற்பட்ட அதே பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக, 2 வீடுகள் மண்ணுக்கடியில் புதைந்து.
 
munnar laandslide
கேரளாவில் கடந்த சில வாரங்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மூணாறு அருகே கண்டலா புதுக்குடி பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு  திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 2 கடைகள், ஒரு கோயில் மற்றும் ஒரு ஆட்டோ மண்ணுக்குள் புதைந்தன.
munnar
நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு மிக அருகாமையில் தான் தமிழக தோட்டத் தொழிலாளர்கள் சுமார் 175 குடும்பத்தை சேர்ந்த 450 க்கும்  மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டதால் பாதுகாப்பாக உள்ளனர். இந்த நிலச்சரிவு காரணமாக மூணாறு -  வட்டவடா நெடுஞ்சாலை சேதமடைந்தது உள்ளது.
munnar
இதனால் பல மணி நேரம் இந்த  சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று அதிகாலை முன்னர் நிலச்சரிவு ஏற்பட்ட அதே பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக, 2 வீடுகள் மண்ணுக்கடியில் புதைந்து. இது குறித்து அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  
munnar
இதே போல் தமிழகத்தில் இருந்து மூணாறு செல்லும் மலைப் பாதையிலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மூணாறு பகுதியில் நிலச்சரிவுக்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாக இருப்பதால் பொதுமக்கள், மற்றும் சுற்றுலா பயணிகள் கவனமாக இருக்கும்படி கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.