Movie prime

நாடு முழுவதும் மீண்டும் அலெர்ட்!! மத்திய அரசு அவசர ஆலோசனை!!

 
central minister
கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவில் தற்போது கொரோனா தொற்று மிக தீவிரமாக பரவி வருகிறது. சீனாவின் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. அடுத்த 3 மாதங்களில் சீனாவின் ஜனத்தொகையில் 40 முதல் 60 சதவீதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
corona test
இந்நிலையில், இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தீவிரமாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவல் வேகம் எடுத்து வருவதால் இன்று மத்திய அரசு ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது.

இன்று நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மூத்த அதிகாரிகளுடனும், நிபுணர்களுடனும் கொரோனா பரவல் குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
corona new
இது குறித்து அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதியுள்ள கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ஜப்பான், அமெரிக்கா, சீனா, கொரியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்திருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும், கண்காணிப்பு பணிகளையும் மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளார்.