Movie prime

பள்ளி கல்வி துறை செயல் மூலமாக தேர்வு நடத்த புதிய முயற்சி!!

 
School leave

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் செயலி மூலம் வளரறி மதிப்பீட்டுத் தேர்வை நடத்த பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
exam in mobile
வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதிக்குள் இந்த தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வருகிற காலாண்டு தேர்வு விடுமுறையில் செயலி வாயிலாக மாணவர்களுக்கு வளரறி மதிப்பீட்டுத் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ennum ezhuthum
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் இந்த மதிப்பீட்டுத் தேர்வை நடத்த பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. பள்ளிக் கல்வித் துறை பல்வேறு முயற்சிகளையும், புதிய முன்னெடுப்புகளையும் முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. அவற்றில் ஒன்றாக செயலில் தேர்வு நடத்தும் இந்த புதிய முயற்சியும் அமைகிறது.