Movie prime

மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த வழக்கில் புதிய ஆதாரம்!!

 
srimathi evidence
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் பகுதியில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அதை தொடர்ந்து, நடைபெற்ற தொடர் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இந்த போராட்டத்தில், போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து சூறையாடியதோடு, வாகனங்களுக்கு தீ வைத்தனர். இந்த சம்பவத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.
srimathi evidence
இறந்த மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின் பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா உள்ளிட்ட 5 பேரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 26 ஆம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில், மாணவி தற்கொலை செய்து கொண்டதாக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்நிலையில், தங்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்களின் அடிப்படையில் மாணவியின் தாய் செல்வி அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.
srimathi evidence
இந்நிலையில், தற்போது மாணவி உயிரிழந்த ஜூலை 13 ஆம் தேதி இரவு 7 மணி அளவில் பள்ளி நிர்வாகத்துடன் மாணவியின் தாய் செல்வி உள்ளிட்ட 9 பேர் பேச்சுவார்த்தையில் இருந்ததாக ஆதாரம் கிடைத்துள்ளது. பள்ளி நிர்வாகம் தங்களை அழைத்து பேசவில்லை என்று மாணவியின் தாய் குற்றச்சாட்டு முன்வைத்திருந்த நிலையில், தற்போது பேச்சுவார்த்தை நடத்தியதற்கான ஆதாரம் வெளியிடப்பட்டுள்ளது.