Movie prime

அடுத்த அதிர்ச்சி!! மீண்டும் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை!! தொடரும் சோகங்கள்!!

 
suicide
சமீப காலங்களாக தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது தமிழகத்தில் அதிகரித்துள்ளது. அடுத்தடுத்து தொடர்ந்து இவ்வாறு நடப்பது மக்களை சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. கொரோனா கால ஊரடங்கு, அனைவரையும் மன அழுத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிலும், மாணவர்களை கடுமையாக பாதித்து மன அழுத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.அடுத்தடுத்து நடக்கும் சோகங்கள் இதை நிரூபிக்கிறது.
restless mind
பள்ளிக்கல்வித்துறை, ஆசிரியர்கள், பெற்றோர்கள் இது குறித்து சற்று விழிப்புடன் செயல்பட வேண்டும். மாணவர்களை நல்ல முறையில் கையாண்டால் நிச்சயம் இந்த சோகங்களை தவிர்க்க இயலும். மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கி அவர்களை நல்வழிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

இந்நிலையில், திருவள்ளூரில் 9 ஆம் வகுப்பு மாணவி, அதிகளவிலான மன அழுத்தம் காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிப்பட்டு தாலுகா ராமா நாயுடு கண்டிகை கிராமத்தில் வசித்து வருபவர் தாமு (45). இவரது மனைவி ராஜராஜேஸ்வரி (30) என்பவர் கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பரிதாபமாக பலியானார்.

இந்த தம்பதிக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். கீச்சலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தாமுவின் மகள்களில் ஒருவர் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். அவர் தாயின் இறப்பில் இருந்து அதிக அளவில் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
thokku
அதை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்