Movie prime

அடுத்த அதிர்ச்சி!! மீண்டும் இன்று முதல் பால், தயிர் விலை உயர்வு!!

 
milk
ஆவின் பால் விலை உயர்வை தொடர்ந்து தனியார் பால் நிறுவனங்களும் பால் விலையை உயர்த்தின. அந்த அதிர்ச்சியில் இருந்தே இல்லத்தரசிகள் இன்னும் முழுவதுமாக மீளவில்லை . இந்நிலையில் தற்போது  மீண்டும் ளான ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி மற்றும் வல்லபா, சீனிவாசா ஆகிய தனியார் பால் நிறுவனங்கள் லிட்டர் ஒன்றுக்கு ₹2 வரை விலையை உயர்த்தி உள்ளன.
aavin milk
புதிய விலை உயர்வின் படி , இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் ஒன்றுக்கு ₹2 அதிகரித்து  ₹48 லிருந்து ₹50 ஆகவும், சமன்படுத்தப்பட்ட பால்  ₹2 அதிகரித்து லிட்டர் ஒன்றுக்கு ₹50 இருந்து ₹52 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதே போல் நிலைப்படுத்தப்பட்ட பால் ₹2 அதிகரித்து  ₹62 லிருந்து ₹64 ஆகவும், நிறை கொழுப்பு பால் ₹2 அதிகரித்து ₹70 லிருந்து ₹72 ஆகவும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தயிர் விலையும் லிட்டருக்கு ₹72 லிருந்து ₹74 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என தகவல்கள் வெளியான நிலையில் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
milk products
தமிழக அரசு சார்பில் ஆவின் பால் , பால் பொருட்கள் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்த கோரி கோரிக்கை விடுத்தனர். இதன் சார்பில் கொள்முதல் விலையை உயர்த்திய தமிழக அரசு பால் விலையையும் உயர்த்தியது. தனியார் பால் பாக்கெட்டுகளை காட்டிலும் ஆவின் பால் விலை குறைவு என்பதால் மக்களிடம் ஆவினுக்கு தான் எப்போதுமே மவுசு அதிகம். ஆனால் இந்த விலை உயர்வு மக்களிடையே அதிருப்தியை உருவாக்கியது. இதையடுத்து தனியார் பால் விலைகளும் உயர்த்தப்பட்டன. இதன்படி  கடந்த ஆண்டு மட்டும்  4 முறை தனியார் பால் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.