Movie prime

விடுமுறை நாட்களில் வகுப்புகள் கூடாது!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!!

 
tn l a
விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், மீறி வகுப்புகள் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
students
10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆண்டின் இறுதியில் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். அதனால், தனியார் பள்ளிகளில்  அவர்கள் பள்ளிகளில் படிக்கும், 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக சிறப்பு வகுப்புகள் நடத்தும் வழக்கத்தை வைத்துள்ளனர்.
exam
அதனால், விடுமுறை நாட்களிலும் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகின்றனர். அதனால் மாணவர்கள் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, பள்ளிக்கல்வித்துறை அவ்வாறு விடுமுறை நாட்களில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு வகுப்புகள் எடுக்க கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.