பாஜக ஒன்றிய தலைவர் வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!!
Sep 14, 2022, 06:46 IST

சிதம்பரம் பரங்கிப்பேட்டை அருகே பாஜக ஒன்றிய தலைவர் வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம், பரங்கிப்பேட்டை சலங்கைக்கார தெருவை சேர்ந்தவர் தாமரை முருகன். இவர் பரங்கிப்பேட்டை பகுதியில் பாஜகவின் வடக்கு ஒன்றிய தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல், தனது வீட்டின் காம்பவுண்டுக்குள் காரை நிறுத்தி உள்ளார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஆள் இல்லாத நேரத்தில் அவரது கார் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி உள்ளனர். இதன் காரணமாக, காரின் பின் பக்க டயர் எரிந்து லேசான சேதம் ஏற்பட்டுள்ளது. மறுநாள் காலை காரை எழுந்து பார்த்த பாஜக ஒன்றிய தலைவர் நிலைமையை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மேலும், இது குறித்து பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.