பெண்கள் இலவசமாக பயணம் செய்ய பிங்க் நிற பேருந்துகள்!! இன்று முதல்!!
Aug 6, 2022, 07:10 IST

பெண்கள் இலவசமாக பயணம் செல்ல பிங்க் நிறத்தில் பேருந்துகள், சென்னையில் இன்று முதல் இயக்கப்படுகிறது. தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. சென்னையில் வெள்ளை நிற பலகை கொண்ட பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சில சமயம் அவசரத்தில் கவனிக்காமல், பெண்கள் மற்ற சொகுசு, டீலக்ஸ் பேருந்துகளில் ஏறி விடுகின்றனர். இலவச பயணத்திற்கான பேருந்துகளை அடையாளம் கண்டு பயனடைய, இந்த பிங்க் நிற பேருந்துகள் இன்று முதல் இயக்கப் படுகின்றன.

போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் சென்னை மெரினா கடற்கரை அருகில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அலுவலகத்திற்கு அருகே, பிங்க் நிறப் பேருந்துகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது. சேப்பாக்கம் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் பிங்க் நிறப் பேருந்துகளை தொடங்கி வைக்க உள்ளார்.

மேலும், அவர் ஓமந்தூர் அரசு பன்னோக்கு மருத்துவமனை, மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் இருந்து மற்ற மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்ல 5 இணைப்பு மினி பேருந்துகளையும் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.