Movie prime

பிரபல BGMI விளையாட்டு திடீர் நீக்கம்!!

 
BGMI
பிரபல விளையாட்டான BattleGrounds Mobile India திடீரென கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், Pubg  என்ற பெயரில் இருந்து வந்த விளையாட்டை இந்திய அரசு தடை செய்ததால், அந்த விளையாட்டுக்கு வேறு பெயர் வைத்து சில சிறு மாற்றங்களை கொண்டு வந்து BattleGrounds Mobile India என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விளையாட்டு கொரியா நாட்டை சேர்ந்த க்ராஃப்டனின் என்பவரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த விளையாட்டு சமீபத்தில் 100 மில்லியன் பதிவீட்டாளர்களை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
BGMI
கொரிய கேம் வெளியீட்டாளரான க்ராஃப்டனின் PUBG மொபைலின் மறுபெயரிடப்பட்ட பதிப்பான Battlegrounds Mobile India (BGMI), அரசாங்க உத்தரவைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள ஆப்பிள் மற்றும் கூகுள் ஆப் ஸ்டோர்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக தேர் வைக்கின்றனர்.

க்ராஃப்டன் செய்தித் தொடர்பாளர் கூறிய போது: "கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரிலிருந்து BGMI எவ்வாறு அகற்றப்பட்டது என்பதை குறித்த தகவலைப் பெற்றவுடன் உங்களுக்குத் தெரிவிப்போம்". என்று அறிவித்துள்ளார்.