பார்சல் உணவு பொரியலில் எலி தலை!! உணவக உரிமம் ரத்து!!
Sep 14, 2022, 08:29 IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் பழைய பேருந்து நிலையம் அருகே ஸ்ரீ பாலாஜி பவன் என்ற சைவ உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் நேற்று முன்தினம் ஆரணி டவுன் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முரளி என்பவர் பார்சலில் சாப்பாடு வாங்கி சென்றுள்ளார்.
ஆனால், இந்த உணவில் கொடுத்த பீட்ரூட் பொரியலில் எலி தலை உள்ளதாக கூறி 25க்கும் மேற்பட்டோர் இந்த உணவகத்தை முற்றுகையிட்டு உணவாக ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொரியலில் எலி தலை இருந்த சம்பவத்தின் எதிரொலியாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து, இன்று ஆரணி அடுத்த தச்சூர் கிராமத்தில் உள்ள 5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இலங்கை தமிழர்கள் குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொள்ள வந்த மாவட்ட ஆட்சியர் முருகேஷ் செய்தியாளர்களிடம், உணவு பொரியலில் எலி தலை உள்ள சம்பவத்தில் முதல்கட்டமாக 35 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து, எலி தலை உள்ள உணவகம் சீல் வைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராமகிருஷ்ணன் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்ரீ பாலாஜி பவன் உணவக உரிமத்தை ரத்து செய்து அரசின் மறு உத்தரவு வரும் வரை ஹோட்டலை திறக்க கூடாது என்று உணவகத்தை மூடி நோட்டீஸ் ஒட்டப்பட்டது.